மாநாடு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு இல்ல.. இந்த ஹீரோ தான்.. வெங்கட் பிரபு சொன்ன தகவல்..!

simbu maanadu 1

நடிகர் சிலம்பரசன் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. தனது திரை வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும் தற்போதும் முன்னணி நடிகராகவே வலம் வருகிறார்.


அந்த வகையில் நடிகர் சிம்புவின் சமீபத்திய வெற்றிப் படங்களில் ஒன்று ‘மாநாடு’ (2021). வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்திருந்தனர். 2021-ல் அளித்த ஒரு பேட்டியில், வெங்கட் பிரபு, மாநாடு படத்தில் நடிக்க சிலம்பரசன் தனது முதல் தேர்வு அல்ல என்றும், சிலம்பரசனின் பெயரை இறுதி செய்வதற்கு முன்பு மற்றொரு நடிகரிடம் கதையைக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

2021-ல் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் மாநாடு படத்திற்கு சிலம்பரசன் முதல் தேர்வு அல்ல என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டார். ஆரம்பத்தில் நடிகர் கார்த்தியிடம் மாநாடு படத்தின் கதையைக் கூறியதாக அவர் தெரிவித்தார்..

மேலும் “ கார்த்தி, ஏற்கனவே ‘சகுனி’ (2012) படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், மற்றொரு அரசியல் படத்தில் நடிக்க விரும்பவில்லை” என்று வெங்கட் பிரபு கூறினார். அதன் பிறகு, கார்த்திக்காக ‘பிரியாணி’ (2013) படத்திற்கான கதையை மாற்றியமைத்தேன்” என்றும் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படமான ‘மாநாடு’, பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது.. இப்படம் உலகளவில் ரூ.79.2 கோடி வசூலித்தது.

சிலம்பரசன் தற்போது வெற்றிமாறன் இயக்கும் ‘வட சென்னை’ (2018) யுனிவெர்ஸின் புதிய படமான ‘அரசன்’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார். ‘அரசன்’ படக்குழுவினர் அக்டோபர் 2025-ல் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் நெல்சன் இடம்பெற்ற ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டனர். ‘அரசன்’ படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : பெரும் சோகம்..! பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.பி வெங்கடேஷ் காலமானார்..! திரையுலகினர் இரங்கல்..!

RUPA

Next Post

காதலியுடன் ரூம் போட்டு உல்லாசம்..!! அந்த விஷயத்தை கேட்டு வெறியான காதலன்..!! கடைசியில் நடக்கக் கூடாத சம்பவம்..!!

Tue Feb 3 , 2026
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர பொறியியல் பட்டதாரியான அர்ஜுன் மற்றும் மீரா ஆகியோரின் 6 மாத கால காதல், ரத்தக் கறையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், மீராவின் கடந்த காலம் குறித்த ரகசியம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இருவரும் விடுதி அறையில் இருந்தபோது, மீரா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் அர்ஜுனிடம் தெரிவித்துள்ளார். 6 மாதங்களாக தான் உருகிக் […]
Sex 2025 7

You May Like