“அப்பா.. நான் உன் பொண்ணுப்பா”..!! 15 நாட்களாக சித்திரவதையுடன் உடலுறவு..!! பெற்ற தந்தையால் கதறி துடித்த 14 வயது மகள்..!!

Child Rape 2025

டெல்லியில், தந்தை என்ற உறவுக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர், தனது 14 வயது மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்தன்று கௌரவ் குமாரின் மனைவி தனது சொந்த ஊரான பீகாருக்குச் சென்றிருந்த நிலையில், கௌரவ் தனது 14 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட அவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இரவு தனது மூத்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால், அந்த சிறுமி சில நாட்கள் உயிருக்குப் பயந்து அமைதியாக இருந்துள்ளார். இந்த அச்சத்தையே தனது வக்கிரத்திற்கு சாதகமாக்கிக் கொண்ட கௌரவ், கடந்த 15 நாட்களில் பலமுறை தனது மகளைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தந்தையின் தொடர் அத்துமீறல்களையும், சொல்ல முடியாத சித்திரவதைகளையும் தாங்க முடியாத அந்த சிறுமி, இறுதியாக மன தைரியத்தை வரவைத்து காவல் நிலையத்தின் கதவுகளை தட்டியுள்ளார். அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டுப் போலீசாரே நிலைகுலைந்து போயினர். சிறுமியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த பஹர்கஞ்ச் போலீசார், உடனடியாக கௌரவ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகளும் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.

Read More : அன்புமணிக்கு முடித்துக் கட்ட துடிக்கும் ராமதாஸ்..!! 30 தொகுதிகளில் தனித்துப் போட்டி..!! பின்னணியில் திமுகவின் மாஸ்டர் பிளான்..!!

CHELLA

Next Post

பணத்திற்காக இப்படியா..? சொந்த தங்கை கர்ப்பம்..!! வீட்டிற்குள் தோண்ட தோண்ட கிடைத்த உடல்கள்..!! ஆடிப்போன காவல்துறை..!!

Wed Feb 4 , 2026
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டம் கோட்டூர் பகுதியில், சொத்து மற்றும் பணத்திற்காக பெற்ற தாய், தந்தை மற்றும் உடன்பிறந்த தங்கையையே இளைஞர் ஒருவன் படுகொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோட்டூரை சேர்ந்த பீமராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 27 வயதில் அக்ஷய் என்ற மகனும், அமிர்தா என்ற மகளும் இருந்தனர். சமீபத்தில் பீமராஜ் தனது சொத்து ஒன்றை விற்றதன் மூலம் சுமார் 1.2 கோடி […]
Crime 2026 3

You May Like