அனல் பறந்த ஆலோசனை..!! தாக்கலாகிறது தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்..!! என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியாகும்..?

MK Stalin 2026

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய திமுக அரசின் இறுதிக்கட்ட அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.


விரைவில் தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ‘இடைக்கால பட்ஜெட்’-டிற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களுக்கான அரசு செலவினங்களை நிர்வகிப்பதற்கான இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை அரசு வடிவமைத்துள்ளது. இதில் புதிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் கால அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்து முதலமைச்சர் அமைச்சர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக, எஞ்சியுள்ள முக்கியப் பணிகளைப் பூர்த்தி செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பொதுவாக தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட் என்பது ஒரு தற்காலிக நிதி ஏற்பாடாகும். புதிய அரசு பொறுப்பேற்கும் வரை நிர்வாக செலவுகள், சம்பளம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதி ஒப்புதலைப் பெறுவதே இதன் நோக்கம். தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த பின்னரே, அந்த நிதியாண்டிற்கான முழுமையான மற்றும் விரிவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : FLASH | அங்கன்வாடி சுட்டிகளுக்கு ஜாக்பாட்..!! மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

CHELLA

Next Post

முறையான காரணம் இல்லாமல், கணவரின் வீட்டை விட்டு மனைவி சென்றால், ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

Thu Feb 5 , 2026
போதுமான மற்றும் நியாயமான காரணம் இல்லாமல் கணவரிடமிருந்து பிரிந்து வாழத் தேர்ந்தெடுக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீவனாம்சம் கோரும் உரிமையைத் தீர்மானிக்க திருமண நிலை என்பது மட்டும் அடிப்படையல்ல என்றும், நடத்தையின் மீதும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில், ஒரு பெண் திருமணமான நான்கு நாட்களுக்குப் பிறகு, வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவர் மற்றும் […]
divorce1

You May Like