உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஆசிரியையிடம் ஒருதலைக் காதல் கொண்டு, அவர் மீது நடத்தியுள்ள கொடூரமான தாக்குதல் ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. மாணவன் – ஆசிரியை என்ற புனிதமான உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியை கடந்த சில நாட்களாகவே அந்த மாணவனின் தொடர் தொல்லைக்கு உள்ளாகி வந்துள்ளார். மாணவனின் வரம்பு மீறிய நடத்தையால் மனமுடைந்த அவர், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சமீபத்தில் தனது பணியிடத்தையே மாற்றிக்கொண்டுள்ளார். இருப்பினும், அந்த மாணவனின் வக்கிரம் குறையவில்லை. சம்பவத்தன்று ஆசிரியை சாலையில் தனியாக சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த அந்த மாணவன், ஆசிரியை என்றும் பாராமல் அவரது கழுத்தை நெரித்து முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளான். பின்னர், ஆசிரியையின் உதட்டை கடித்துக் குதறி ரத்தக் காயங்களை ஏற்படுத்தியுள்ளான்.
மாணவனின் கொடூரத் தாக்குதலால் பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்த ஆசிரியையை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசிரியை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மெயின்புரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் இழைத்த மாணவன் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவனைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Read More : ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்..!! இனி பொருட்களுக்கு பதில் பணம்..!! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா..?



