அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பாலியல் குற்றவாளி தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.. கோடீஸ்வரரான இவருக்கு அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.. ஆனால் எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன..
2000-களின் தொடக்கத்தில் இருந்தே எப்ஸ்டீன் மீது புகார்கள் வந்தாலும், நீண்ட காலம் சட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் துன்புறத்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீனின் மரணம் அதிகாரப்பூர்வமாக தற்கொலை என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் கோப்புகள் என்ற பெயரில் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 புகைப்படங்களை வெளியிட்டது. டொனால்ட் ட்ரம்ப் பில்கேட்ஸ், பில் கிளிண்டன், எலான் மஸ்க், இளவரசர் ஆண்ட்ரூ என பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.. மேலும் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது..
அதாவது 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி எப்ஸ்டீனின் ஆலோசனையின் பெயரிலேயே இஸ்ரேல் சென்றார் எனவும் அது டிரம்புக்கு சாதகமாக அமைந்தது என்றும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.. இந்த ஆவணங்கள், புகைப்படங்கள் தான் தற்போது உலகையை அதிரவைத்து வருகின்றன..
இந்த நிலையில் அமெரிக்க நீதித்துறை (US Justice Department) சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆவணம், குழந்தைகள் பாலியல் குற்றத்தில் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் புதிய சதி கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. நீதித்துறை தரவுத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆவணம் EFTA00133623 என்ற குறியீட்டுடன் உள்ளது. இது எப்ஸ்டீன் வழக்கில் வெளியிடப்பட்ட புதிய கோப்புகளின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆவணத்தில் உள்ள ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு, எப்ஸ்டீன் தனது மரணத்தை போலியாக ஏற்பாடு செய்தார் என்ற கூற்றுகள் இணையத்தில் பரவி வருகின்றன. கடந்த சில நாட்களாக எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் மீண்டும் பேசுபொருளாக மாறியதால், பல்வேறு சதி கதைகள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.
2019 ஆம் ஆண்டு சிறையில் எப்ஸ்டீன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால், அப்போது மீட்கப்பட்ட உடல் உண்மையில் எப்ஸ்டீனுடையதா என்ற சந்தேகம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் எழுந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, “எப்ஸ்டீன் இறந்துவிட்டார் என்று நினைத்து கோப்புகளை படித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென EFTA00133623 வந்தது” என்று ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
EFTA00133623 ஆவணத்தில் உள்ள கையெழுத்து குறிப்புகளில், “அதிகாலை 4.15 மணிக்குப் பிறகு, எப்ஸ்டீனை கைக்கட்டுடன் சக்கர நாற்காலியில் மருத்துவப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் எந்த நர்ஸும் அவருடன் பேசவில்லை. அதன் பிறகு திடீரென ஒரு வாகனம் வந்தது. வார இறுதிகளில் நீதிபதி உத்தரவு இல்லாமல் விடுதலை செய்வது இல்லை. பின்னர் அவர் தனி செல்லில் வைக்கப்பட்டு தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தின் பதிவு எண் பதிவு செய்யப்படவில்லை. வாகனத்தில் ராணுவ உடை போன்ற பச்சை ஆடை அணிந்த ஒருவர் இருந்ததாக காவலர் கூறினார். அவரை மாற்றி விட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், எப்ஸ்டீன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறப்படும் ஒரு புகைப்படமும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த படத்தில் கருப்பு கண்ணாடி அணிந்து, நீளமான முடி கொண்ட ஒருவர் இருக்கிறார்.. அவர் எப்ஸ்டீன் தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.
அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஒருவர், “இது எப்ஸ்டீனின் முழு படம். அவர் இஸ்ரேலில் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “பொதுவாக இப்படி வரும் படங்களை நம்ப மாட்டேன். ஆனால் இது உண்மையிலேயே எப்ஸ்டீன் போல இருக்கிறது. அருகில் காதில் இயர்பீஸ் வைத்த ஒருவர் நிற்கிறார். நான் அதிகமாக யோசிக்கிறேனா?” என்று ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால், எப்ஸ்டீன் மரணம் குறித்த பழைய சந்தேகங்கள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அவரது மரணம் குறித்து வெளியிடப்பட்ட தகவல்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கவனம்..! நீங்க அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றி பெற்றதாக மெசெஜ் வந்தால் நம்பாதீங்க..! மொத்த பணமும் காலி..!



