ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
இந்த நிலையில் இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை சவரனுக்கு ரூ.1600 குறைந்த தங்கம் விலை மாலை ரூ.1,040 உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு கிராமுக்கு ரூ.130 உயர்ந்து, ரூ.14,250 ஆக விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலையில் குறைந்த தங்கம் மாலையில் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read More : 2.5 கோடி ஆதார் அட்டைகள் ரத்து; UIDAI அதிரடி நடவடிக்கை..! இதுதான் காரணம்..!



