Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ரூ.15,000 உயர்வு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

Gold Jewellery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ரூ.1,17,200-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.15 உயர்ந்து, ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை..! உடனே இதை செய்யுங்க..! இல்லையெனில் உங்களால் சாலையில் பயணிக்க முடியாது..!

RUPA

Next Post

“ எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்..” யுரேனியம் செறிவூட்டல்.. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை..!

Mon Feb 9 , 2026
வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.. அணு திட்டத்தில் ஈரானின் நிலை தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் […]
iran us tensions

You May Like