மீண்டும் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட ஜனநாயகன் படம்.. பின்வாங்கிய படக்குழு..! ரிலீஸ் எப்போது?

jananaygan vijay

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நீதிமன்றத்தை நாடியது.


இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.

எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதனால் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.. தயாரிப்பு தரப்பு இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது..

இதனிடையே ஜனநாயகன் பட வழக்கில், உடனே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது… வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், முறையான வாய்ப்பு அளித்து தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.. இதனால் மீண்டும் தனி நீதிபதி அமர்வில் ஜனநாயகன் பட வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரும் விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.. தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் திரைப்படத்தை மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி உள்ளது… இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்..

Read More : Google Gemini, ChatGPT-ஐ மிஞ்சிய இந்தியாவின் ‘சுயாதீன AI’ சர்வம் AI..! முழு விவரம் இதோ..!

RUPA

Next Post

“செங்கோட்டையன் ஒரு கிழவர்.. அவர் எந்த நாட்டிற்கு விஜய்யை முதல்வராக்கப் போகிறார்..” அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்..!

Mon Feb 9 , 2026
அதிமுகவை ஊழல் சக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், விஜய்யையும் தவெகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று விஜய் மற்றும் செங்கோட்டையனை காட்டாமாக விமர்சித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு என்றே ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்.. செல்லாக்காசு 1000 பேசினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. […]
sellur raju sengottaiyan

You May Like