பெண்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்..!! ரூ.2,000ஆக உயருகிறது மகளிர் உரிமைத்தொகை..!! அமைச்சர் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!

Magalir Urimai Thogai 2025

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய திமுக அரசு தயாராகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு இந்த திட்டம் ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


தற்போது மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தொகையை 1,500 அல்லது 2,000 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, வேலூர் காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், “மகளிர் உரிமைத் தொகை உயர்கிறது, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என கூறியுள்ளார். முன்னதாக அமைச்சர் ஐ.பெரியசாமியும், பொங்கல் பண்டிகையை ஒட்டி பெண்களுக்கு ஒரு பெரிய பரிசு காத்திருப்பதாக கோடிட்டுக் காட்டியிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக சுமார் 17 லட்சம் பெண்கள் இதில் இணைக்கப்பட்டனர். தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்குவோம் என வாக்குறுதி அளித்து வருகிறது. இதற்குப் போட்டியாகவும், பெண்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் உரிமைத் தொகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய அமைச்சர்களே இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதால், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : இந்த 5 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால், லட்சுமி தேவியின் அருள் நிச்சயம் கிடைக்கும்..!

CHELLA

Next Post

உங்கள் பாவங்களை போக்கும் புனித நீர்..!! தமிழ்நாட்டிலேயே இத்தனை ஊர்களில் இருக்கா..? கண்டிப்பா போயிட்டு வாங்க..!!

Tue Feb 10 , 2026
மனிதன் தன் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களை நீக்கி, மனத்தூய்மை பெற ஆன்மீகம் காட்டும் எளிய வழி புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பழமையான கோயிலிலும் ஒரு தெய்வீகத் தீர்த்தம் அமைந்திருப்பது நமது முன்னோர்களின் ஆன்மீக மற்றும் அறிவியல் மேலாண்மைக்குச் சான்றாகும். இந்தத் தீர்த்தங்களில் நீராடுவது வெறும் சடங்கல்ல; அது மன அழுத்தத்தை நீக்கி, உடல் பிணிகளைப் போக்கி, வாழ்வை நல்வழிப்படுத்தும் ஒரு உன்னத நிகழ்வாகக் கருதப்படுகிறது. […]
Temple Water 2026

You May Like