ஆண்களே..!! தாம்பத்திய உறவில் ‘கிங்’காக இருக்கணுமா..? ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள்..!!

Sex 2025 5

இன்றைய நவீன வாழ்வியல் சூழலில், மன அழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஆண்களுக்குப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, திருமணமான மற்றும் திருமணம் செய்யவிருக்கும் இளைஞர்கள் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக ஆண்மை குறைபாடுகள் உள்ளன. இதற்குத் தற்காலிகத் தீர்வைத் தரும் ஆங்கில மருந்துகளைக் காட்டிலும், எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத நமது பாரம்பரிய உணவு முறைகளே நிரந்தர தீர்வைத் தருகின்றன.


ஆண்களின் உடல் வலிமைக்கும் விந்து அணுக்களின் உற்பத்திக்கும் நட்ஸ் வகைகள் பெரும் பங்காற்றுகின்றன. தினசரி மாலை வேளைகளில் ஒரு 5 முந்திரிப் பருப்புகளை நெய்யில் வறுத்துச் சாப்பிடுவது தாது பலத்தைப் பெருக்க உதவும். அதேபோல், 5 பாதாம் பருப்புகளை இரவே நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதத்தை வழங்குகிறது.

அதேபோல், நமது முன்னோர்கள் பயன்படுத்திய ‘மாசிக்கருவாடு’ ஒரு சிறந்த மருந்தாகும். இதனை இடித்துத் தூளாக்கி, உப்புமா அல்லது பொரியல் போல செய்து உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். மேலும், உளுந்தங்களி உடல் பலத்தைப் பெருக்குவதில் மிகச்சிறந்த உணவாகும். எலும்பு சூப் அடிக்கடி அருந்துவது உடலில் தாது உற்பத்தியை அதிகரித்து எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும். பிரண்டைத் துவையல் மற்றும் நெல்லிக்காய் சட்னி ஆகியவற்றை உணவில் சேர்ப்பது செரிமானத்தைச் சீராக்கி உடலை தேற்றும்.

வாரம் இருமுறை கடல் மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஹார்மோன் குறைபாடுகளை சரிசெய்ய உதவும். அஞ்சறைப் பெட்டியின் மருத்துவக் குணங்கள் நிறைந்த இஞ்சி மற்றும் நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து அருந்துவது உடலில் பித்தம் அதிகரிக்காமல் பாதுகாக்கும். மேலும், முருங்கைப் பூ மற்றும் முருங்கை கீரையை பொரியலாக செய்து சாப்பிடுவது ஆண்மை சக்திக்கு ஒரு இயற்கை ஊக்கியாக செயல்படும்.

உணவு முறைகள் ஒருபுறம் இருந்தாலும், உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். இதற்குத் தினசரி ஒரு இளநீர் குடிப்பது உஷ்ணத்தை தணிக்கும். முறையான உடற்பயிற்சி மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகியவை ஆரோக்கியமான இல்லற வாழ்க்கைக்கு அடிப்படை. இரவு 11 மணிக்குள் உறங்க செல்வதும், மனதை அமைதியாக வைத்துக்கொள்வதும் உடலில் ஹார்மோன் சமநிலையை உறுதிப்படுத்தும். இந்த எளிய இயற்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

Read More : பெண்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்..!! ரூ.2,000ஆக உயருகிறது மகளிர் உரிமைத்தொகை..!! அமைச்சர் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

“8 வருஷமா ஏங்கி இருக்கிறேன்”..!! மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு மறுத்த மனைவி..!! கடுப்பில் ஆணுறுப்பை துண்டாக்கிய கணவன்..!!

Tue Feb 10 , 2026
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது பிறப்புறுப்பை தானே சிதைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட கால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன கசப்பு மற்றும் விரக்தி காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிய வருகிறது. காசி ராம் (37) மற்றும் மஞ்சரி தேவி தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்குள் சரியான உறவு […]
sex life

You May Like