பறவைக் காய்ச்சல்.. ஹாஃப் பாயில் சாப்பிட வேண்டாம்.. அமைச்சர் மா.சு. எச்சரிக்கை..!

Bird Flu 2025

பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


இந்த சூழலில் சென்னையில் காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அங்கு ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பறவை காய்ச்சல் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.. அதில் பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.. பறவை காய்ச்சல் நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை பறவை காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்..

இருமல், சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.. முற்றிலும் சமைக்கப்படாத முட்டை மற்றும் சரியாக சமைக்கப்படாத இறைச்சிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.. பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், இந்த நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். பறவை காய்ச்சல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிலையில் பறவைக் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது..மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. பறவைக் காய்ச்சல் என்பது பரவும் நோயல்ல.. இறந்து கிடக்கும் பறவைகளை வெறும் கைகளில் தொட வேண்டாம்.. அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும்..

பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.. திடீரென ஒரு கோழி இறந்தால் அதனை சாப்பிட வேண்டாம்.. கோழி உள்ளிட்ட பறவைகளின் இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது..” என்று தெரிவித்தார்..

Read More : இந்த 2 பழக்கங்களையும் மாற்றினால், உங்களுக்கு புற்றுநோயே வராது..!

RUPA

Next Post

PF கணக்கு வைத்திருப்போருக்கு குட்நியூஸ்..! இனி UPI மூலம் ATM பணத்தை எடுக்கலாம்..!

Tue Feb 10 , 2026
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சுமார் 80 மில்லியன் மக்களுக்கு ஒரு பரிசை வழங்க உள்ளது. இப்போது உங்கள் PF பணத்தை எடுக்க நீங்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. EPFO ​​ஏப்ரல் 2026 இல் ஒரு புதிய மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை (EPF) தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக ATM மூலம் UPI மூலம் எடுக்க முடியும். அதாவது […]
EPFO Atm 1

You May Like