“அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உயிர் போவது.. கொடுமையின் உச்சம்..” திமுக அரசை சாடிய இபிஎஸ்..!

Stalin EPS 2025

விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம்.

மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்துவிடுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ? போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.

இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது.. இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித் துறை இருக்கிறதா?

அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா? மாணவர்களின் பாதுகாப்பை Compromise செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா? இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு,
“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.

பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், Group II போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு.. விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : பறவைக் காய்ச்சல்.. ஹாஃப் பாயில் சாப்பிட வேண்டாம்.. அமைச்சர் மா.சு. எச்சரிக்கை..!

RUPA

Next Post

மதுராந்தகத்தில் வலிமையை நிரூபித்த NDA கூட்டணி..! அதிரும் 2026 தேர்தல் களம்..!

Tue Feb 10 , 2026
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி பல கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொண்டார். ஆளும் திமுக அரசாங்கத்தை எதிர்த்து களமிறங்கும் நிலையில், இந்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. பல வருட போட்டிக்குப் பிறகு மாநில அரசியலில் ஒரு மாற்றத்தைக் குறிக்கும் வகையில், அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் அமமுக தலைவர் டிடிவி […]
nda dmk

You May Like