வீண் விளம்பரங்களுக்கு பல நூறு கோடி செலவு செய்யும் திமுக அரசுக்கு இதற்கு நிதி இல்லையா..? அண்ணாமலை சாடல்..!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்..


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்துள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நிதிநிலைமை காரணம் கூறி, ஆசிரியப் பெருமக்களைப் பணிநீக்கம் செய்துள்ள திமுக அரசின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 153 ல், 10 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிகப் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களைப் பணிநீக்கம் செய்து, பெரிய துரோகம் செய்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே, சுமார் 45.44% ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது, கடந்த டிசம்பர் மாதம் வெளியான செய்திகளில் தெரியவந்தது. இந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது திமுக அரசு.

கடந்த 2024 – 2025 ஆண்டில் மட்டும், சுமார் 110 கோடி, விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது திமுக அரசு. இந்த ஆண்டு, ஊரக உள்ளாட்சித்துறைக்கு மட்டுமே, ₹500 கோடி, விளம்பரச் செலவுக்கு ஒதுக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே பல நூறு கோடி செலவு செய்து வரும் திமுக அரசுக்கு, ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யவோ, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவோ நிதி இல்லை என்றால், இந்த கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு ஸ்டாலின்
எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?

உடனடியாக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கும் பணி வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : “அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உயிர் போவது.. கொடுமையின் உச்சம்..” திமுக அரசை சாடிய இபிஎஸ்..!

RUPA

Next Post

'கட்டுரை எழுதியதற்காக' போக்சோ குற்றவாளியின் ஆயுள் தண்டனையை குறைத்த மும்பை உயர் நீதிமன்றம்..!

Tue Feb 10 , 2026
குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை, பம்பாய் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் குறைத்துள்ளது. ஆயுள் தண்டனையாக இருந்த சிறைத் தண்டனை, 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி, காட்கோபார் பகுதியில் வசிக்கும் ஒருவர். 2016 டிசம்பர் மாதத்தில், அண்டை வீட்டில் வசித்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு […]
mumbai high court 11zon

You May Like