அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலை எப்படி இருக்கு..? ICU-வில் தீவிர சிகிச்சை..? வெளியானது மருத்துவ ரிப்போர்ட்..!!

12675699 duraimurugan

திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதை கடந்த நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் அவர், நேற்று (பிப்ரவரி 10) எதிர்பாராத விதமாக தனது இல்லத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வீட்டில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பல்லோ மருத்துவமனையின் நிபுணர் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர் சீரான நிலையில் இருப்பதாகவும், உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். ICU-வில் கால் வலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இன்னும் சில நாட்கள் அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Read More : “விஜய் ஒரு தற்குறி”..!! “தமிழக அரசியலில் கூத்தாடிகளுக்கு இடமில்லை”..!! பரபரப்பை கிளப்பிய சாட்டை துரைமுருகன்..!!

CHELLA

Next Post

இந்தியாவின் எப்ஸ்டீன் யார் தெரியுமா..? சடலங்களுடன் உடலுறவு..!! உடலை துண்டுத் துண்டாக வெட்டி சமையல்..!! அதிரவைத்த சம்பவம்..!!

Wed Feb 11 , 2026
அமெரிக்காவை அதிரவைத்த ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்திற்கு இணையான ஒரு கொடூரமான குற்றச்சம்பவம், கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் அரங்கேறியது. இந்தியாவையே நிலைகுலைய வைத்த இந்த வழக்கில், தொழிலதிபர் மொகிந்தர் சிங் பந்தேர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்தர் கோலி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி, அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் […]
Nithari Murder Case 2026

You May Like