சில நொடிகளில் துல்லியமான முடிவுகள்..!! மூளை பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் AI..!! வியப்பில் மருத்துவ உலகம்..!!

Brain 2026

மருத்துவத் தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு மைல்கல்லாக, மூளை தொடர்பான பாதிப்புகளை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு (AI) புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘பிரைமா’ (PRIMA) என்ற அதிநவீன AI தொழில்நுட்பம், மருத்துவத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


சுமார் 2.2 லட்சம் மூளை MRI ஸ்கேன்களைக் கொண்டு விரிவான பயிற்சி அளிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், மனித மூளையில் ஏற்படும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பாதிப்புகளை அடையாளம் காணும் திறன் கொண்டது. குறிப்பாக, ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேனை ஆய்வு செய்து முடிவுகளை வழங்க இது எடுத்துக்கொள்ளும் காலம் வெறும் சில விநாடிகளே. வேகத்தில் மட்டுமின்றி, துல்லியத்திலும் அசத்தி வரும் இந்தத் தொழில்நுட்பம், சுமார் 97.5 சதவீத துல்லியத்துடன் முடிவுகளை கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.

நரம்பியல் நிபுணர்களின் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய பகுதிகளில், இந்த ‘பிரைமா’ தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கலான மூளை நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, விரைவான சிகிச்சையை தொடங்க இது பெரிதும் உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More : திடீரென எழுந்து நிற்கும்போது தலை சுற்றுகிறதா..? முன்கூட்டியே எச்சரிக்கும் அறிகுறிகள்..!! உடனே இதை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

துரோகியான உயிர் நண்பன்..!! துப்பாக்கி முனையில் மனைவியை பலாத்காரம் செய்த நட்பு..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Wed Feb 11 , 2026
ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் காட்புரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தனது உயிர் நண்பனின் மனைவியை நண்பனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும், குற்றம் சாட்டப்பட்ட சாகர் என்பவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். சாகர் அந்தப் பெண்ணை ‘மைத்துனி’ (அண்ணி) என்று முறை வைத்து அழைத்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தை […]
rape 1

You May Like