கொரிய நடிகர் ஜங் யூன் வூ பிப்ரவரி 11 அன்று காலமானார். 40 வயதான அவர் திடீரென இறந்துவிட்டதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், பின்னர் அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் தற்போது வரை தெரியவில்லை. அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அவர் பகிர்ந்து கொண்ட ஒரு சமூக ஊடகப் பதிவுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு அவரது மனநிலை, அவரது சமீபத்திய தலைப்புகள் மற்றும் போட்டோக்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன..
மறைந்த ஜங் யூன் வூ-வின் உடல் பியோக்ஜே தகனத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் பிப்ரவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவரின் திடீர் மறைவு செய்தி வெளியானதிலிருந்து, ரசிகர்கள், சக நடிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவனத்தை ஈர்க்கும் ஜங் யூன் வூவின் கடைசி பதிவு
இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, ஜங் யூன் வூ இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார், அங்கு அவருக்கு சுமார் 7,000 பின்தொடர்பவர்கள் இருந்தனர். அந்தப் பதிவில் மறைந்த ஹாங்காங் பாடகரும் நடிகருமான லெஸ்லி சியுங் மற்றும் மறைந்த பிரிட்டிஷ் பாடகர்-பாடலாசிரியர் ஆமி வைன்ஹவுஸின் படங்கள் இருந்தன.
மூன்றாவது படமாக அவரது சொந்த சுயவிவரப் புகைப்படம் இடம்பெற்றது. “காணவில்லை, பொறாமைப்படுகிறேன், வருந்துகிறேன்..” என்ற தலைப்பில் இருந்தது. முன்னதாக, அவர் ஒரு சிவப்பு நிலவின் படத்தையும் வெளியிட்டிருந்தார். அவர் அதற்கு “சிவப்பு நிலவு. தொங்கினாலும் . அது எப்படியும் விழப்போகிறது (sic)” என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
ஜங் யூன் வூவின் திரை வாழ்க்கை
ஏப்ரல் 10, 1986 அன்று தென் கொரியாவின் இஞ்சியோனில் பிறந்த ஜங் யூன் வூ டோங்குக் பல்கலைக்கழகத்தின் நாடகம் மற்றும் திரைப்படத் துறையில் படித்தார். 2006 இல் KBS2 நாடகமான Round UP -3 இல் அறிமுகமானார். பல ஆண்டுகளாக, அவர் MBC இன் H.I.T (2007) மற்றும் KBS1 இன் Smile Again (2011) ஆகியவற்றில் நடித்தார்.. படிப்படியாக தொலைக்காட்சியில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார்..
Bride of the Sun (2011) மற்றும் Five Fingers (2012) ஆகியவை ரசிகர்களிடையே பிரபலமானது.. Five Fingers க்காக, 2012 இல் SBS நாடக விருதுகளில் புதிய நட்சத்திர விருதைப் பெற்றார். அவர் One Well-Raised Daughter, My Heart Twinkle Twinkle, The Return of Hwang Geum-bok, My Only One, மற்றும் சமீபத்தில், 2019 இல் Welcome to Waikiki 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : நடுங்க வைக்கும் கொடூர குற்றங்கள்.. உலகத்தை உலுக்கிய எப்ஸ்டீன் தீவு இன்று யாருடையது?



