தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.. இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். பலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு தாய்லாந்தின் சோங்க்லாவில் உள்ள ஒரு பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.. இது நாட்டின் வரலாற்றில் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூடு என்று கூறப்படுகிறது..
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், ஆயுதமேந்திய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வெளியே சாலைகளில் ஓடிவிட்டனர். பல ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
ஹட் யாய் மாவட்ட அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகக் கூறினர். இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாக வில்லை… பள்ளியின் தலைமை ஆசிரியரை துப்பாக்கிதாரி சுட்டதாக கூறப்படுகிறது..
அந்த பள்ளியின் காவலர் இதுகுறித்து பேசிய போது“என் வயிற்றில் ஒரு தோட்டா துளைத்தது, ஆனால் நான் தப்பித்தேன். பள்ளி இயக்குனர் சுடப்பட்டார். பள்ளிக்குள் இன்னும் குழந்தைகள் பிணைக் கைதிகளாக இருந்தனர்.” என்று கூறினார்..
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 18 வயது இருக்கும் என்று நம்பப்படுகிறது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்தனர்.. பிணைக் கைதிகளாக யாரும் பிடித்து வைக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Read More : பெரும் சோகம்..! பிரபல கொரிய நடிகர் காலமானார்; அவரின் உருக்கமான கடைசிப் பதிவு வைரல்..!



