பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டு வெடித்ததால் பதற்றம்.தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்ததில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சேர்ந்த 3 பேர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்த சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்தது.
கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பேரணிக்குப் பிறகு வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது.”தெஹ்ரீக்-இ-இன்சாஃப்பின் மூன்று தொழிலாளர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் மற்றும் 7 பேர் காயமடைந்துள்ளனர்” என்று மாகாண பொதுச் செயலாளர் சலர் கான் கக்கர் தெரிவித்துள்ளார்.