“இனியும் வெயிட் பண்ண முடியாது”..!! தவெகவுக்கு தாவும் EX அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்..!! பேரதிர்ச்சியில் ஓபிஎஸ்..!!

Vellamandi Natarajan OPS 2026

தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து நிலவும் மர்மம், தற்போது அவரது சொந்த அணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளில் ஓபிஎஸ் காட்டி வரும் தொடர் மவுனம், அவருடன் பயணிக்கும் முக்கிய நிர்வாகிகளை ஒருவித தவிப்பிற்கும், அதிருப்திக்கும் தள்ளியுள்ளது. இதனால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கருதும் நிர்வாகிகள், மாற்றுப் பாதையை தேட தொடங்கியுள்ளனர்.


அந்த வகையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய முகமாக அறியப்படும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர், புதிய வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸால் அதிருப்தியில் இருக்கும் இவர்கள், செங்கோட்டையன் மூலம் தவெகவில் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது, ‘இனியும் காத்திருப்பதில் பலனில்லை’ என்ற மனநிலைக்கு வந்திருக்கும் இந்த நிர்வாகிகள், விரைவில் ஒரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தனது அணியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விரிசலை அறிந்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது அதிர்ச்சியில் உள்ளார். திருச்சியை சேர்ந்த செல்வாக்குள்ள தலைவரான வெல்லமண்டி நடராஜன் போன்றவர்கள் வெளியேறினால், அது அணியின் பலத்தைப் பெருமளவு பாதிக்கும் என்பதால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஓபிஎஸ் இறங்கியுள்ளாராம். தர்மயுத்தம் தொடங்கி இன்று வரை உறுதுணையாக இருந்தவர்கள் தடம் மாற துடிப்பது, ஓபிஎஸ்-ன் அரசியல் பயணத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.

Read More : வாழ்வா – சாவா போராட்டத்தில் ஓபிஎஸ்..!! அரசியல் வாழ்வை தீர்மானிக்க போகும் ஐகோர்ட்..!! பிப்.16இல் தீர்ப்பு..?

CHELLA

Next Post

வெற்றி தரும் விஜய ஏகாதசி..!! இன்று இந்த பொருளை வீட்டில் வாங்கி வைத்தால் செல்வம் பெருகும்..!! விரதம் கடைபிடிப்பது எப்படி..?

Fri Feb 13 , 2026
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியானது ‘விஜய ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில், இந்த முக்கியமான விரத நாள் பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. ஆன்மீக ரீதியாக இந்த நாளுக்கு மிகப்பெரிய மகத்துவம் உண்டு. இந்த நாளில் முழு மனதுடன் மகா விஷ்ணுவை வழிபட்டு, அவருக்குப் பிடித்தமான மஞ்சள் நிறப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினால், நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும் […]
Vijaya Ekadashi 2026

You May Like