கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது, அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Read More : மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.. பெண்களுக்கு குட்நியூஸ் சொன்ன CM ஸ்டாலின்..!



