fbpx

பட்ஜெட் 2024 | கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி..!! அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு..!!

2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

— கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயதுக்குள்ள பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

— கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

— ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

— நாடு முழுவதும் புதிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் தொடரும்.

— சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.

— மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

— ஆஷா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு.

— லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

— 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தரம் உயர்த்தப்படும்.

Chella

Next Post

"போச்சா.." '500'கோடி நிதி இழப்பை சந்திக்கும் 'PAYTM'..!! ரிசர்வ் பேங்க் நடவடிக்கையை தொடர்ந்து வெளியான அதிர்ச்சி தகவல்.!

Thu Feb 1 , 2024
வருகிறது பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகு PAYTM பேமென்ட் உடைய சர்வீஸ்களை முற்றிலுமாக நிறுத்த ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இதனால் பேடிஎம் நிறுவனத்திற்கு 300 முதல் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 29க்கு பிறகு வாடிக்கையாளர் கணக்குகள் ப்ரீபெய்டு கருவிகள், பணப்பைகள், ஃபாஸ்ட்டேக்குகள், புதிய டெபாசிட்டுகள் மற்றும் பல வகையிலும் பண பரிவர்த்தனைகளை செய்வதற்கும், டாப்அப்புகளை ஏற்பதற்கும் பேடிஎம் நிறுவனத்தை மத்திய வாங்கி […]

You May Like