சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் லதா (45), தனது கார் ஓட்டுநருடன் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த ரகசிய தொடர்பு, தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. வெளிநாட்டில் கணவர், அமெரிக்காவில் படிக்கும் மகள் என வாழ்க்கையை வாழ்ந்து வந்த லதாவிற்கும், அவரது 22 வயது கார் ஓட்டுநர் ராமுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக காருக்குள்ளேயே நூதன முறையில் காதல் உறவு நீடித்து வந்துள்ளது.
யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக எந்த ஹோட்டலுக்கோ அல்லது தனியிடத்திற்கோ செல்லாமல், போக்குவரத்து நெரிசல் குறைந்த சாலைகள், மால் பார்க்கிங் மற்றும் கட்டுமான இடங்கள் என தனது காரையே ரகசிய அறையாக மாற்றி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு இயங்கி வந்த இந்த உறவில், பண விவகாரத்தால் மோதல் வெடித்துள்ளது.
தனது காதலிக்கு ‘ஐபோன்’ வாங்கித் தர ராம் பணம் கேட்க, லதா அவரை மிக கேவலமான வார்த்தைகளால் திட்டியதோடு, வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம், லதாவை பழிவாங்கத் திட்டம் தீட்டினார். கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, வழக்கம் போல இருவரும் காரின் பின் இருக்கையில் தனிமையில் இருந்தபோது, ராம் தனது செல்போனை மறைத்து வைத்து அனைத்தையும் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.
பின்னர், அடுத்த நாளே அந்த வீடியோவை வெளிநாட்டிலிருந்து திரும்பிய லதாவின் கணவருக்கு அனுப்பி அதிர வைத்தார். வீட்டிற்கு வந்த மனைவிக்கு அந்த வீடியோவை காட்டி கணவர் அதிர்ச்சி கொடுக்க, லதாவின் முகத்திரை கிழிந்தது. இந்த விவகாரம் விவாகரத்து வரை சென்ற நிலையில், லதா கொடுத்த புகாரின் பேரில் ராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக காரில் நடந்த அனைத்து ரகசியங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. தனி நபர் அந்தரங்கத்தைப் படம் பிடித்தது மற்றும் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக ராம் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : மதுப்பிரியர்கள் ஷாக்..!! தமிழ்நாடு முழுவதும் பிப்.17ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலவரையின்றி மூடல்..!!



