தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடலோர மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களைக் கைது செய்வதும், பல லட்சம் மதிப்புள்ள அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளை வழிமறித்துப் பறிமுதல் செய்ததோடு, அதிலிருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More : “பெண்டாட்டி வந்த நேரம்”..!! எந்த ராசியினருக்கு திருமணத்திற்குப் பின் தொட்டதெல்லாம் பொன்னாகும்..?



