கொல்கத்தாவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில், ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது கணவர் அருண் மற்றும் நர்சிங் படிக்கும் தங்கை மீரா ஆகியோரின் துரோகத்தால் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகிறார். நர்சிங் படிப்புக்காக அக்கா வீட்டில் தங்கியிருந்த மீரா, கடந்த ஓராண்டாக தனது அக்காவின் கணவர் அருணுடன் முறையற்ற தொடர்பில் இருந்துள்ளார்.
கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு, இருவரும் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது எதனையும் அறியாத ராதா, தனது தங்கை மற்றும் கணவன் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். காதலர் தினத்தன்று, தனது கணவர் ஏதேனும் சர்ப்ரைஸ் கொடுப்பார் என ராதா காத்திருந்த வேளையில், அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ராதா தனது கொலுசை சுத்தம் செய்ய ஊறவைத்திருந்ததால், அவர் படுக்கையறைக்குள் நுழைந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. அப்போது, அருண் தனது கட்டிலுக்கு கீழே மறைந்து அமர்ந்து, ஆடையில்லாத நிலையில் இருந்த மீராவுடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து ராதா நிலைகுலைந்து போனார்.
உடனடி வாக்குவாதம் கைகலப்பாக மாற, மனமுடைந்த ராதா கரப்பான் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அருணை உடனடியாக கைது செய்தனர். மீராவும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
Read More : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கோடைக்கால சிறப்பு உதவித்தொகை..!! வெளியான செம குட் நியூஸ்..!!



