அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்..! இடைக்கால பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..!

govt employees thangam thennarasu

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.


இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது.. இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது..

நெடுஞ்சாலைகள் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டு உள்ளது.

சென்னையில் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே ரூ.671 கோடியில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1317 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடியில் அயோத்தி தாசர் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகைக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம அறியப்படாத 22 சுற்றுலா தளங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 14.89 லட்சம் மெட்ரிக் டன், 5 ஆண்டுகளில் 2.15 கோடி மெட்ரிக்  டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.12,359 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு, பால்வலம், மீன்வளத்துறைக்கு ரூ.4,435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடித் தடைகாலத்தில் வழங்கப்படும் தொகை ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மை உடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர் அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம்..

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பணியில் இருப்ப்வர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்.

ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Read More : கோவை, மதுரை மெட்ரோ திட்டம்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

RUPA

Next Post

தமிழக அரசுக்கு ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு.. செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி.. நிதியமைச்சர் குற்றச்சாட்டு..!

Tue Feb 17 , 2026
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.. அப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.. மேலும் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.. தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்காமல் செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.. தொடர்ந்து பேசிய அவர் “ ஜி.எஸ்.டி ஆல நடப்பாண்டில் ரூ.9600 […]
thangam thennarasu modi

You May Like