தமிழக அரசுக்கு ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு.. செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி.. நிதியமைச்சர் குற்றச்சாட்டு..!

thangam thennarasu modi

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.. அப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.. மேலும் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.. தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்காமல் செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்..


தொடர்ந்து பேசிய அவர் “ ஜி.எஸ்.டி ஆல நடப்பாண்டில் ரூ.9600 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு 4.07 சதவீதமாக குறைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

0.44% என்ற மிகச்சிறிய அளவிலேயே நிதிப் பகிர்வு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2025-26 மத்திய அரசின் பட்ஜெட்டில் வரிப் பங்கு திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.15,000 கோடி இழப்பீட்டு நிதி தர நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கான நிதியை கூட விடுவிக்க மறுக்கிறார்கள்.. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கு ரூ.3548 கோடி, ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3112 கோடி நிலுவையில் உள்ளது.

மத்திய அரசு தர வேண்டிய ரூ.9500 கோடி, நிலுவைத் தொகை கடனில் தொடர்ந்து இருந்து வருகிறது.. நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2.06 லட்சம் கோடி ஆக உள்ளது.. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 11.15 சதவீதம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தர வேண்டிய நிதி மானியம் ரூ.24,000 கோடி நிலுவையில் உள்ளது.. மத்திய அரசு, தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய அரசின் நிதி நடப்பாண்டு ரூ.20,073 கோடியாக குறையும்.. 2025-26 நிதி ஆண்டில் ரூ.69,000 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறையாக உள்ளது.. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.. தமிழக இடைக்கால பட்ஜெட்டை 142 நிமிடங்கள் இடைவிடாமல் தாக்கல் செய்து தனது உரையை நிறைவு செய்தார் தங்கம் தென்னரசு..

Read More : கோவை, மதுரை மெட்ரோ திட்டம்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

RUPA

Next Post

இளைஞர்களை வேளான் தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம்.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Tue Feb 17 , 2026
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 58,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. உழவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம். உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுங்கள் வழங்கப்பட்டுள்ளன. 10,558 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யபப்ட்டுள்ளது. கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை […]
mrk panneerselvam

You May Like