தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்..
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
58,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
உழவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம். உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுங்கள் வழங்கப்பட்டுள்ளன.
10,558 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யபப்ட்டுள்ளது.
கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போ திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு, 19.51 லட்சம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்..
2025-26-ம் ஆண்டில் 12.48 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களை வேளான் துறையில் தொழில் முனைவோராகக் ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. உரம் விதைகளை வழங்க 1000 உழவர் நல சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதி பெற்றுள்ளனர்.
10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளில் குறுவை பருவத்தில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.2,118 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
5 ஆண்டுகாலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
600 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.80 கோடி மதிப்பிலான பனைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்அனை செய்யப்பட்டது. பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் 5 ஆண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்ச்சியின் மூலம் 1.45 லட்சம் பேருக்கு பயனடைந்துள்ளனர். சூரிய சக்தி பம்பு செட் போன்ற உயர்மதிப்பு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவு, சிறு குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்படுகிறது.
5 ஆண்டுகளில் இயற்கை பேரிடரால் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசன திட்டத்தை பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தை உடன் இணைக்கப்பட்டதால் 18 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 137 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் புவிசார் குறியீட்டுக்காக 41 விளைப் பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படுள்ளது.
46 கோடியில் உழவர் சந்தைகள் இதுவரை புதுப்பிக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வேளாண் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் பயிர் கடன் வட்டி மானியமாக ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.. நெல்மணிகளை பாதுகாக்க ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கொள்முதல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்பட உள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 174 ஏக்கர் அரசு நிலங்கள் மீட்கப்பட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.730 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
அரசு மீன் பண்ணைகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு குளங்களில் விடப்பட்டுள்ளன.
Read More : இளைஞர்களை வேளான் தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம்.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!



