அரசு பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் கசியவிடுபவர்களுக்கு 5 முதல்10 ஆண்டுகள் வரையும், ரூ.1 கோடிவரை அபராதமும் விதிக்கப்படும் என்று மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டி தேர்வில் தேர்ச்சி பெறுவதை லட்சியமாக கொண்டு பலரும் முயற்சித்து வருகின்றனர். தேர்ச்சி பெறுவதற்கு சிலர் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் போட்டி தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி போட்டித் தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுபவா்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வரும் திங்கட்கிழமை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டு தோ்வு முறைகேடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கடி எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தொடர்ந்து இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.