Flash : ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுகவில் இணைந்தார்..!

leema rose

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.


அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து சில நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்..

இந்த நிலையில் லாட்டரி மார்ட்டினின் மனைவியும், ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமீபத்தில் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியில் இருந்து விலகிய லீமா ரோஸ் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அந்த வகையில் தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

முன்னதாக மு,க. அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்த பி.எம்.மன்னன் சற்றுமுன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மதுரையின் துணை மேயராகவும் இருந்த மன்னன் இன்று அதிமுகவில் இணைந்தார்.. சென்னை பசுவமை வழிசாலையில் உள்ள இபிஎஸ்-ன் இல்லத்தில் இபிஎஸ்-ஐ சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.. மன்னனின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் இன்று இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : ஆட்சியில் பங்கு.. “ திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கமாட்டோம்.. ஆனால்..” திருமா திட்டவட்டம்..!

RUPA

Next Post

காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிப்பது நல்லதா..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!!

Tue Feb 17 , 2026
ஆரோக்கியம் குறித்த தேடல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைகளை விட, அனுபவம் என்ற பெயரில் பகிரப்படும் சமூக வலைதளக் குறிப்புகளே பலரையும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், “காலையில் ஒரு குவளை வெந்நீர் குடித்தால் நூற்றுக்கணக்கான நோய்கள் ஓடிவிடும்” என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், வெந்நீர் குடிப்பதன் மூலம் உடல் பருமனை அடியோடு குறைத்துவிடலாம் என்பதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை என்று […]
Copy of hot water b8 102023

You May Like