“பாவம் போக்கும் மாசி மகம்”..!! இந்த நாளில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா..? எப்போது வருகிறது..?

Masi Magam 2026

தமிழகத்தின் ஆன்மீக மரபில் நீர் நிலைகளுக்கும், வழிபாட்டிற்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை பறைசாற்றும் உன்னதமான திருவிழா ‘மாசி மகம்’. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நன்னாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக ஆற்றல் பெருகி காணப்படும் நாளாக கருதப்படும் இந்நாளில், பெரும்பாலான ஆலயங்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் நீர் நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ‘தீர்த்தவாரி’ உற்சவம் கண்டருளுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


தெய்வங்களே தங்களின் ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ளும் நாளாக இது போற்றப்படுவதால், இந்நாளில் பக்தர்களும் புனித நீராடினால் கர்மவினைகள் நீங்கி, செல்வமும் ஆரோக்கியமும் பெருகும் என்பது ஐதீகம். முப்பத்து முக்கோடி தேவர்களும் பூலோகத்திற்கு வந்து பக்தர்களை ஆசீர்வதிப்பதாக நம்பப்படும் மாசி மகம், புதிய முயற்சிகளை தொடங்க மிக உகந்த நாளாகும். குறிப்பாக, புதிய தொழில் தொடங்குதல், முதலீடுகள் செய்தல் அல்லது முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்ற காரியங்களைச் செய்யும்போது தெய்வீக அருளால் அது பன்மடங்கு வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி திங்கட்கிழமை மாசி மகம் கொண்டாடப்படுகிறது. மகம் நட்சத்திரம் மார்ச் 2-ம் தேதி காலை 8:17 மணி முதல் மார்ச் 3-ம் தேதி காலை 8:07 மணி வரை உள்ளதாலும், பௌர்ணமி திதி மார்ச் 2-ம் தேதி மாலை 6:29 மணிக்குத் தொடங்குவதாலும், நட்சத்திர அடிப்படையிலேயே மார்ச் 2-ம் தேதியை மாசி மக திருநாளாக கொள்ள வேண்டும் என ஆன்மீக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, பித்ருக்களின் ஆசி பெறுவதற்கும் இந்நாள் மிக முக்கியமானது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபடுவது குடும்பத்தில் அமைதியையும் சுபிட்சத்தையும் நிலைநாட்டும். புராணங்களின்படி, அம்பிகை பார்வதி தேவி தட்சனின் மகளாக அவதரித்ததும் இந்த மாசி மகத் திருநாளில்தான். எனவே, இந்நாளில் தேவி வழிபாடும், குறிப்பாக கும்பகோணம் மகாமகம் குளம் போன்ற புனித தீர்த்தங்களில் நீராடுவதும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுதலையும், பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து மோட்சத்தையும் வழங்கும் என நம்பப்படுகிறது. நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடல் அலையின் ஓசைக்கிடையே தெய்வங்களின் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும் என்பது கூடுதல் சிறப்பு.

Read More : நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! புதிய திட்டம் தொடக்கம்..!

CHELLA

Next Post

"நாங்க ஓல்டு பேஷனா இருக்கலாம்.. ஆனா இதுதான் நிஜம்"..!! திருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவு..!! நீதிபதிகள் பரபரப்பு கருத்து..!!

Wed Feb 18 , 2026
நவீன கால காதல் மற்றும் உறவுமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட ஜாமீன் மனு ஒன்றினை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாங்கள் பழங்கால எண்ணம் கொண்டவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் சட்ட ரீதியாகவும், எதார்த்த ரீதியாகவும் திருமணத்திற்கு முன்பு ஆண்-பெண் […]
Sex Court 2025

You May Like