“நாங்க ஓல்டு பேஷனா இருக்கலாம்.. ஆனா இதுதான் நிஜம்”..!! திருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவு..!! நீதிபதிகள் பரபரப்பு கருத்து..!!

Sex Court 2025

நவீன கால காதல் மற்றும் உறவுமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட ஜாமீன் மனு ஒன்றினை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாங்கள் பழங்கால எண்ணம் கொண்டவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் சட்ட ரீதியாகவும், எதார்த்த ரீதியாகவும் திருமணத்திற்கு முன்பு ஆண்-பெண் இருவரும் அடிப்படையில் அந்நியர்களே” என்று தெரிவித்துள்ளனர்.


வழக்கின் பின்னணி என்ன..?

இந்த வழக்கில், 2022-ஆம் ஆண்டு திருமண இணையதளம் ஒன்றின் வாயிலாக அறிமுகமான ஒரு ஜோடி, திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெல்லி மற்றும் துபாயில் உடல் ரீதியான நெருக்கத்தில் இருந்துள்ளனர். ஆனால், 2024 ஜனவரியில் அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்தச் சூழலில், திருமண உறுதிப்பாடு என்பது வெறும் பேச்சளவில் இருக்கும்போது, அதனை முழுமையாக நம்பி உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடுவதை தவிர்த்திருக்கலாம் என்று நீதிபதி நாகரத்னா சுட்டிக்காட்டினார். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது தற்கால சூழலில் பாதுகாப்பானது அல்ல என்றும், குறிப்பாக உடல் நெருக்கம் போன்ற விவகாரங்களில் அதீத விழிப்புணர்வு அவசியம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More : “பாவம் போக்கும் மாசி மகம்”..!! இந்த நாளில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா..? எப்போது வருகிறது..?

CHELLA

Next Post

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்..? ஆய்வு முடிவில் வெளியான சூப்பர் தகவல்..!!

Wed Feb 18 , 2026
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஐடி துறையினர் போல நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் ஒரு நிம்மதியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றின்படி, காலில் உள்ள ஒரு சிறிய தசைக்கு நாம் கொடுக்கும் பயிற்சி, ரத்தச் சர்க்கரை அளவை குறைப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மனிதனின் கெண்டைக்கால் பகுதியில் உள்ள ‘சோலியஸ்’ (Soleus) என்ற தசையைத் தூண்டுவதன் […]
work from home

You May Like