Breaking : திடீர் ட்விஸ்ட்.. முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..! ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா..!

premalatha stalin meet

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது… திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. யாருடன் கூட்டணி அமைப்போம் என்று விரைவில் அறிவிப்போம் என்று பிரேமலதா கூறியிருந்தார்..

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஏற்கனவே எ.வ வேலு மூலம் திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பு மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக முதன்முறையாக இணை உள்ளது.. விரைவில் திமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. எத்தனை தொகுதிகள் என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது..

Read More : Breaking : பெரும் ஷாக்..! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,160 உயர்வு..! வெள்ளி விலை ரூ.10,000 உயர்வு..!

RUPA

Next Post

2016-ல் எதிர்பார்க்கப்பட்டது 2026-ல் நடந்தது.. திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பிரேமலதா விளக்கம்.!

Thu Feb 19 , 2026
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.. ஏற்கனவே எ.வ வேலு மூலம் […]
premalatha

You May Like