Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.2,080 உயர்வு.. வெள்ளியும் தாறுமாறு உயர்வு..!

Gold Jewellery

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.260 அதிகரித்து, ரூ.14,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1,17,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து 2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : ஓலா, ஊபர் கார்களுக்கு ஆப்பு..!! டெல்லி, குஜராத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அறிமுகமாகிறது பாரத் டாக்ஸி..!! கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

RUPA

Next Post

எகிப்து முதல் கீழடி வரை.. உலக தாய்மொழி தினம்.. தமிழ் மொழி குறித்து முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் பெருமிதம்..!

Sat Feb 21 , 2026
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை ஊக்குவிக்க, யுனெஸ்கோ (UNESCO) 1999-ல் இந்த நாளை அறிவித்தது. வங்காள மொழிக்காக போராடிய தியாகிகளை நினைவு கூரும் வகையில், தாய்மொழி உரிமையை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகில் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்தல், தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடுவதன் நோக்கமாகும்.. […]
stalin kamal

You May Like