தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை, எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அதிரடியாக சிறைபிடித்துள்ளனர். மீனவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகையும் இலங்கை ராணுவம் பறிமுதல் செய்துள்ளது. இச்சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவக் குடும்பங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. கடலுக்கு செல்லும் மீனவர்கள் உயிருடனும், உடைமையுடனும் கரை திரும்புவார்களா என்ற அச்சம் கடலோர மாவட்டங்களில் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு போதிய அழுத்தம் கொடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
“தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது” எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இலங்கை அரசுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Read More : கூட்டணி முறிவு..? திமுக நிர்வாகிகளை சந்திக்க தேமுதிகவினருக்கு தடை..!! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி உத்தரவு..!!



