முன்னோர்கள் கூறும் பல அறிவுரைகளை நாம் கேட்பதில்லை. எனவேதான் சில அறிவியல் உண்மைகளை மூடி மறைத்து, அதன் மேல் பொய்கள் பூசி நம்மை பின்பற்ற வைத்திருக்கின்றனர். அப்படியாக சொன்ன ஒரு பொய்தான் புளிய மரத்தில் பேய் உள்ளது என்பதும். இதில் மறைக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை இப்போது காணலாம்.
புளிய மரத்தில் உள்ள பூ, வேர், காய், கனி என்ற அனைத்திலும் நிறைய நல்ல பண்புகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. ஆயினும் புளிய மரத்தின் கீழ் மக்கள் அதிக நேரம் செலவிடக்கூடாது என்பதற்காக முன்னோர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள்?
மற்ற மரங்களைக் காட்டிலும் புளியமரம் அதிக குளிர்ச்சி தன்மையை தரக்கூடியது. அதன் கீழ் அதிக நேரம் செலவிடும்போது, நமது வாத நரம்புகள் பாதிப்படையலாம். இது சிலருக்கு முடக்குவாதம் போன்ற பிரச்சனையை கூட உருவாக்கலாம்.
பறவைகளும், விலங்குகளும் புளிய மரத்தில் வசிப்பதை விரும்புவதில்லை. அதற்குக் காரணம் புளியமரம் அதிக அளவிலான கார்பன் டையாக்சைடை வெளியிடுவது தான். இது பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சுவாசிப்பதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது. மனிதனின் ஆரோக்கியத்திற்கும் இது பல கேடுகளை விளைவிக்கும்.
மனிதன் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவை என்பதால், அந்த சுத்தமான ஆக்சிஜன் தரக்கூடிய அரச மரம் போன்ற மரங்களின் கீழ், சாமி சிலைகளை வைத்து வழிபட்டனர். அதற்காகத்தான் அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் தெய்வங்களின் சிலையை 9 முறை, 11 முறை என்று வலம் வரவும் கூறினார்கள். அறிவியல் உண்மைகளை உடைத்துக் கூறினால் நாம் பின்பற்ற தவறலாம் என்பதை உணர்ந்த நமது முன்னோர்கள், வெவ்வேறு யுக்திகளை கையாண்டு, சுவாரசியமான பொய்களை கலந்து நம்மை பின்பற்ற செய்தனர்.