Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ரூ.10,000 உயர்வு.. தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

jewel n

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.180 அதிகரித்து, ரூ.14,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வாரத்தின் முதல் நாளே தங்கம் விஐ உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்து ரூ. 3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து 11 நாட்கள் விடுமுறை..!!

RUPA

Next Post

யாரும் வெளியே வர வேண்டாம்.. மெக்சிகோவில் வெடித்த கலவரம்.. இந்திய தூதரகம் எச்சரிக்கை..!

Mon Feb 23 , 2026
மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.. எல் மென்சோ கொல்லப்பட்டதால் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்தனர்.. மேலும் மெக்சிகோவில் கண்ணில் தென்படும் வாகனங்கள், வணிக வாகனங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. இந்த நிலையில் மெக்சிகோவில் பல பகுதிகளில் கடுமையான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அங்கு வசிக்கும் இந்திய […]

You May Like