வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் நம் மீது அவ்வளவு அவதூறு பரப்புகின்றனர்..
ஆனால் என் மீது அவதூறு பரப்பினால், அது மக்கள் மீது அவதூறு பரப்புவது மாதிரி என்று அவர்களுக்கு தெரியாது.. எனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வது மாதிரி,, என்னை அசிங்கமாக பேசினால், அது மக்களை அசிங்கமாக பேசுவது மாதிரி என்று..
எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிரான செயல் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.. இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை.. இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி.. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்க முடியாது.. அது சென்சிட்டிவான செண்டிமெண்ட்.. இதை யாரும் அசைக்க முடியாது.. மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? மக்களை நம்புறீங்களா? இல்லை ஸ்டாலின் சாரை நம்புறீங்களா? திமுகவுக்கு போட்டி தவெக தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்..
இங்குள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தங்கள் சொத்து மதிப்பை ஓபனாக அறிவிக்க முடியுமா? எனக்கு ஒரு புது நண்பர் கிடைத்திருக்கிறார்.. முதல்வர் அவர்கள் தான்.. எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று சமீபத்தில் முதல்வர் சொன்னார்.. அப்படி நாங்கள் எல்லாம் நண்பர்கள் என்றால், கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழியை தூக்கிப் போட்டீங்க? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா?
நாங்கள் நண்பர்கள் நாங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தி ஏன் அனுமதி கொடுக்கவில்லை.. போகிற போக்கில் எதையாவது சொல்லிக் கொண்டு செல்கிறீர்கள்.. தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி வேண்டுமானலும் இருந்து கொள்ளுங்கள்.. ஆனால் உங்கள் ஆட்சி உங்கள் ஆட்சி தவறான ஆட்சி.. தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆட்சி.. நமக்கு ஆதரவாக ஒரு கோஷத்தை எழுப்பி உள்ளனர்.. எங்க வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடியாம்.. ஆனால் அதற்கு அர்த்தம் எங்க வாக்குச்சாவடி விஜய் வாக்குச்சாவடி என்பது தான்..” என்று தெரிவித்தார்..



