“இது சென்சிட்டிவான செண்டிமெண்ட்.. யாரும் அசைக்க முடியாது..” கண்கலங்கி எமோஷ்னல் ஆன விஜய்..!

tvk vijay 2

வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. இன்று ஜல்லிக்கட்டு காளை தொடர்பான குட்டிக்கதை உடன் விஜய் தனது உரையை தொடங்கினார்.. அதாவது தமிழ்நாட்டின் அரசியல் களம் தான் ஜல்லிக்கட்டு காளை என்றும், அதை யாராலும் அடக்க முடியாத போது ஸ்டைலாக கெத்தாக சிறுவன் அடக்கியதாகவும், அந்த சிறுவன் தவெக என்ற ரீதியில் ஒரு கதை சொன்னார்.


தொடர்ந்து பேசிய விஜய் வழக்கம் போல் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடினார்.. தீய சக்தி திமுகவுக்கும் தூய சக்தி தவெகவுக்கும் இந்த தேர்தலில் போட்டி என்று கூறினார்.. விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கான போர் இது எனவும் விஜய் தெரிவித்தார்.

மேலும் வேலூர் நிகழ்ச்சியில் பேசிய போது விஜய் ஒருகட்டத்தில் கண் கலங்கினார்.. அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் நம் மீது அவ்வளவு அவதூறு பரப்புகின்றனர்..

ஆனால் என் மீது அவதூறு பரப்பினால், அது மக்கள் மீது அவதூறு பரப்புவது மாதிரி என்று அவர்களுக்கு தெரியாது.. எனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வது மாதிரி,, என்னை அசிங்கமாக பேசினால், அது மக்களை அசிங்கமாக பேசுவது மாதிரி என்று.. எனக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிரான செயல் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.. இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை.. இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி.. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்க முடியாது.. இது சென்சிட்டிவான செண்டிமெண்ட்.. இதை யாரும் அசைக்க முடியாது..” என்று ஆவேசமாக பேசிய விஜய் கண்கலங்கினார்..

மேலும் மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? மக்களை நம்புறீங்களா? இல்லை ஸ்டாலின் சாரை நம்புறீங்களா? திமுகவுக்கு போட்டி தவெக தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்..: என்றும் தெரிவித்தார்.

Read More : “ ஸ்டாலின் சார், அறிவாலயம் பக்கம் யார் போனாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார்..” தேமுதிக கூட்டணியை விமர்சித்த விஜய்..!

RUPA

Next Post

சாமானிய மக்களுக்கு குட்நியூஸ்..! சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக குறையப் போகுது..!

Mon Feb 23 , 2026
சமையல் எண்ணெய் என்பது இது ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமானது. இருப்பினும், தற்போது சமையல் எண்ணெய் ரூ.150க்கு மேல் உள்ளது. இந்த விலை சாமானியர்களுக்கு சற்று அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இதே விலையில் தொடர்கிறது. இந்த சூழலில், மத்திய அரசு சாமானியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது. கச்சா சமையல் எண்ணெய்களுக்கான […]
cooking oil

You May Like