”சசிகலா, ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார்கள்..” அடித்து சொன்ன டிடிவி தினகரன்..! பரபரக்கும் அரசியல் களம்..!

eps ops sasikala ttv

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அமமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்டது..


ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுக, தவெக பக்கம் சென்று விட்ட நிலையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.. மேலும் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும்,.. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார்.

ஓபிஎஸ் திமுக உடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பாரா? என்பது தெரியவில்லை.. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. மறுபுறம் சசிகலா புதிய கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் விரைவில் கூட்டணிக்கு வருவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தெரிவித்துள்ளார்.. இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ இன்று என்.டி.ஏ கூட்டணியில் அம்மாவின் தொண்டர்கள் 99.9% பேர் ஓரணியில் திரண்டிருக்கிறோம்.. ஒதுங்கி இருப்பவர்கள், விலகி இருப்பர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். சசிகலா, ஓபிஎஸ் இருவரும் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவார்கள்.. மக்கள் விரோத திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்துள்ளோம்..

என்.டி.ஏ கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது.. கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.. அதிமுகவும், அமமுகவும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை அம்மா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக முழு மனதுடன் ஒன்றிணைந்திருக்கிறோம்.. எனவே சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரும் விரைவில் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவார்கள்.. தீய சக்தி திமுக ஆட்சியை வீழ்த்தி என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வருவார்கள்..” என்று தெரிவித்தார்..

சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியிலோ கூட்டணியிலோ சேர்க்க முடியாது என்று இபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.. இந்த சூழலில் சசிகலா, ஓபிஎஸ் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

RUPA

Next Post

Breaking : ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை.. கடன் முழுமையாக தள்ளுபடி.. இபிஎஸ் அதிரடி..!

Tue Feb 24 , 2026
ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.. மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம் போல் ஏறி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. சொத்து வரி, குடிநீர் வரி போன்ற வரிகள் திமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.. அதிமுக […]
edappadi k palaniswami

You May Like