“நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்..” வீரபாண்டியன் விளக்கம்..!

nallakannu veera pandiyan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது..


பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.. பின்னர் அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி வந்தார்..

இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலையில், கடந்த சில தினங்களாகச் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. இதனால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் வீரபாண்டியன் நல்லகண்ணு உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.. தன் வாழ்வின் பெரும்பகுதியை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த மகத்தான தலைவர் இயற்கையோடு போராடுகிறார்..

இதனிடையே நல்லகண்ணு குறித்து தமிழகத்தில் பல்வேறு செய்திகள் வெளியாகிறது.. அவை உண்மை அல்ல.. நல்லக்கண்ணு குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியான பின்னர், அதிகாரப்பூர்வமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்புகளை வெளியிடும். அதுவரை எத்தகையை தகவலையும் யாரும் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.. இது மருத்துவ சம்மந்தப்பட்டது, உயிர் சம்மந்தப்பட்டது.. மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் வரை தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கும்..” என்று தெரிவித்தார்..

Read More : ஜெயலலிதாவை நான் கொலை செய்தேனா..? மரணத்திற்கு முன் நடந்தது இதுதான்..!! புதிய புயலை கிளப்பிய சசிகலா..!!

RUPA

Next Post

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 5 OTT தளங்கள் எவை? ஆபாச உள்ளடக்கத்தை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு..!

Wed Feb 25 , 2026
ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறி ஆபாசமான மற்றும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்வதாக அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, 5 OTT தளங்களுக்கான அணுகலை பிளாக் செய்யுமாறு இணைய சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் MoodXVIP, Koyal PlayPro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய OTT […]
ott ban

You May Like