நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்..!

Nallakannu Rajinikanth

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது..


பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.. பின்னர் அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி வந்தார்..

இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.. இதனால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் வீரபாண்டியன் நல்லகண்ணு உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.. தன் வாழ்வின் பெரும்பகுதியை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த மகத்தான தலைவர் இயற்கையோடு போராடுகிறார்..

நல்லகண்ணு குறித்து தமிழகத்தில் பல்வேறு செய்திகள் வெளியாகிறது.. அவை உண்மை அல்ல.. நல்லக்கண்ணு குறித்த மருத்துவமனை அறிக்கை வெளியான பின்னர், அதிகாரப்பூர்வமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்புகளை வெளியிடும். அதுவரை எத்தகையை தகவலையும் யாரும் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.. நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணு உடல்நிலை குறித்து விசாரித்தார்.. ரஜினிகாந்த் நேற்றைய தினமே நல்லகண்ணுவை சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் இன்று தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளார்.. நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்..

Read More : மார்பு வலி மட்டும் இல்லை.. இவையும் மாரடைப்பின் அறிகுறிகள்தான்..! கவனமாக இருங்க..!

RUPA

Next Post

பாமக பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. உரிமையியல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..

Wed Feb 25 , 2026
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]
anbumani 1

You May Like