இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது..
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.. பின்னர் அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி வந்தார்..
இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலையில், கடந்த சில தினங்களாக பெரும் பின்னடைவு ஏற்பட்டது.. இதனால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் நல்லகண்ணுவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..
இந்த நிலையில் நல்லகண்ணு இன்று மதியம் காலமானார்.. அவருக்கு வயது 101. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் பிற்பகல் 1.55 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை தெரிவித்துள்ளது.. நல்லகண்ணுவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறது..
Read More : “நான் வீட்டில் இருப்பேன்.. இல்லை ஆபிஸில் இருப்பேன்..” விஜய் ஸ்டைலிலேயே வீடியோ… மீண்டும் கடுப்பேத்திய ஜூலி..!



