fbpx

பரபரப்பு…! திருப்பூரில் ED அதிகாரிகள் என கூறி நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி கொள்ளை…!

திருப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி நூல் வியாபாரி அங்குராஜ் என்பவரின் வீட்டில் ரூ.1.69 கோடி கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.88.66 லட்சம் பணம், 3 கார் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை எடுத்த அக்கும்பல், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அங்குராஜ் தரப்பு திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் கே.வி.ஆர்., நகர உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பத்ரா, உதவி ஆய்வாளர்கள் விவேக், ரஜினிகாந்த், கார்த்தி, ராஜேந்திரபிரசாத், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த விஜய் கார்த்திக் என்கின்ற ஜெயச்சந்திரன், தாம்பரம் அடுத்துள்ள சேலையூரைச் சேர்ந்த குப்தா என்கின்ற நரேந்திரநாத், கோவை சுண்டக்காமுத்தூரைச் சேர்ந்த ராஜசேகர், கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த ராஜூ, சேலம் மேட்டூரைச் சேர்ந்த கோபிநாத், ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Vignesh

Next Post

அசத்தல்...! நாடு முழுவதும் இன்று முதல்... பாரத் அரிசி கிலோ ரூ.29-க்கு விற்பனை...!

Tue Feb 6 , 2024
மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி’ விற்பனை இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் தால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த […]

You May Like