2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ உட்கட்சி விவகாரங்களால் தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனையில், கட்சியின் மிக முக்கியத் தூண்களாக கருதப்படும் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல், கட்சியின் ஆரம்பகட்ட தேர்தல் பணிகளிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கருத்து வேறுபாடு வெறும் தனிப்பட்ட விவாதமாக இல்லாமல், கட்சியின் அடிப்படை தேர்தல் கொள்கையிலேயே மோதிக்கொண்டதுதான் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மோதலின் மையப்புள்ளி ‘வேட்பாளர் தகுதி’ என்பதாகவே உள்ளது. விஜய் மக்கள் இயக்க காலத்திலிருந்து பல ஆண்டுகளாகத் தங்களது உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கிய பழைய நிர்வாகிகளுக்கே தேர்தலில் போட்டியிட முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் உறுதியாக வாதிட்டுள்ளார். ஆனால், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, “விசுவாசம் ஒருபுறம் இருந்தாலும், தொகுதியில் பண பலம், மக்கள் செல்வாக்கு மற்றும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ள நபர்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும்” என்ற கார்ப்பரேட் பாணி வியூகத்தை முன்வைத்துள்ளார். இந்த இருவேறு துருவக் கருத்துகளால் ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே தடைபட்டதாகக் கூறப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமியின் பிடிவாதமான போக்கால் அதிருப்தி அடைந்த புஸ்ஸி ஆனந்த், தனது அடுத்தகட்ட கட்சித் திட்டங்களை ரத்து செய்துவிட்டு தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக தெரிகிறது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகும் நிலையில், இரண்டாம் கட்டத் தலைமையிலேயே ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப் போட்டி மற்றும் கருத்து மோதல், தலைவர் விஜய்க்குப் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
Read More : திமுக கூட்டணிக்கு ஆதரவு..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல கட்சி..!! CM ஸ்டாலின் குஷி..!!



