“சர்வாதிகாரி இபிஎஸ் இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது..” திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் பேட்டி.!

eps and ops

அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை..


திமுகவில் இணைந்த பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலினுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் அரசியல் பண்பாட்டு உடன் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறார்..

அரசியலில் இன்று சர்வாதிகாரியாக ஆணவப் போக்குடன் நடந்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி எந்த காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத என்ற சூழ்நிலையை அதிமுகவுக்கு உருவாக்கி இருக்கிறார்.. அம்மா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று மு.க ஸ்டாலினின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்துள்ளனர்..

மு.க ஸ்டாலினை நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.. ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்டோடு தளபதி திமுகவை நடத்தி வருகிறார்..

ஆட்சியை பொறுத்தவரை, தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்து வருகிறார்.. மன மகிழ்ச்சி உடன் திமுகவில் இணைந்துள்ளேன்.. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.. தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.. அண்ணா எப்படி அரவணைப்போடு அனைத்து கட்சிகளையும் சட்டமன்றத்தில் நடத்தினாரோ அதே போல் முதல்வர் ஸ்டாலினும் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்தினார்.. ” என்று தெரிவித்தார்.

Read More : திமுகவில் அம்மா விசுவாசி..! நகர்மன்ற தலைவர் முதல் முதலமைச்சர் வரை..! ஓபிஎஸ் கடந்து வந்த அரசியல் பாதை..!

RUPA

Next Post

3 தொகுதிகள் கேட்ட ஓபிஎஸ்-க்கு ஷாக்..! ஸ்டாலின் கொடுத்தது எத்தனை தொகுதிகள் தெரியுமா? பரபரப்பு தகவல்..!

Fri Feb 27 , 2026
முன்னாள் முதல்வரும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவருமான ஓபிஎஸ் தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டார்.. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் […]
Tamil News lrg 3995383 1

You May Like