தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது..
அந்த வகையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.. இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக, அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் சென்னையில் வைத்து ஆலோசனை நடத்தினர்.. இதில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, தேர்தல் முன்னேற்பாடுகள், தேர்தல் தேதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது..
இந்த நிலையில் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயக திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும் என்று ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் “ தமிழ்நாட்டில் 5.37 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.. பெண் வாக்காளர்கள் 2,89.60,838 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேர் உள்ளனர்..
18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் உள்ளனர்.. 22 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 1 கோடி பேர் உள்ளனர்.. தமிழ்நாட்டில் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது..
தமிழ்நாட்டில் SIR பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தமிழ்நாடு நினைவில் வைத்துக் கொள்ளும்.. தேர்தலின் போது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பதிவேற்றபப்டும்.. தேர்தல் வெளிப்படையாக நடைபெறும்.. இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்.. தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம்..
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் கண்காணிக்கப்படுவார்கள்.. சமூக வலைதள பதிவுகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும்.. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இருக்கும் என்பதால் எளிதாக இருக்கும்ம்.. படிவம் 6 மூலம் இப்போது கூட வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்கலாம்..” என்று தெரிவித்தார்..



