“ஓபிஎஸ்-ன் முடிவு துரதிருஷ்டவசமானது.. இதுக்கெல்லாம் ஒரு ஆள் தான் காரணம்..” இபிஎஸ் பெயரை சொல்லாமல் சசிகலா விமர்சனம்..!

dmk stalin sasikala

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார்.. இதுகுறித்து அதிமுகவினர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடி வருகின்றனர்.. இந்த நிலையில் சசிகலா ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.


தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.

ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : “ஓபிஎஸ் 1000 எதிரிக்கு சமம்.. திமுகவின் B டீமாக இருந்து அதிமுகவை அழிக்க நினைத்தார்..” விளாசிய சி.வி. சண்முகம்..!

RUPA

Next Post

ஒரே நேரத்தில் இரு திசைகளிலும் பாயும் அதிசய நதி! அதன் ரகசியம் என்ன..? வியக்க வைக்கும் தகவல்..!

Fri Feb 27 , 2026
நதிகள் எப்போதும் இயற்கையின் அதிசயமாக இருந்து வருகின்றன. உயரமான மலைகளில் இருந்து உருவாகி கடலில் கலக்கும் ஆறுகள் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும். ஆறுகள் பொதுவாக ஒரு திசையில் பாய்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆறுகள் உயரத்திலிருந்து தாழ்வாக ஈர்ப்பு விசை விதிகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் உலகில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரு நதி உள்ளது. கனடாவில் உள்ள எச்சிமாமிஷ் நதி ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பாய்கிறது. […]
river flows two direction

You May Like