தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு செய்தி, திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தனது தீவிர ரசிகையும் இலங்கை தமிழ்ப் பெண்ணுமான சங்கீதாவை விஜய் கரம் பிடித்தார். இந்தத் தம்பதியருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சுமார் கால் நூற்றாண்டுக் காலம் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இடையே, சமீபகாலமாகச் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வந்தன.
இந்நிலையில், அந்த யூகங்களை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா அவர்கள் செங்கல்பட்டில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது. நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த குடும்ப விவகாரம் இப்போது நீதிமன்றப் படி ஏறியிருப்பது, விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வரும் இந்த இக்கட்டான சூழலில், அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சட்ட ரீதியான நகர்வு, தவெக கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஒருவிதத் தயக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
Read More : கோடையிலும் வாடாத மாடித் தோட்டம்..!! மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்க சூப்பர் டிப்ஸ்..!!



