நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.. கடந்த டிசம்பவர் மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது..
தங்களின் திருமண வாழ்க்கை ஆரம்பக் கட்டத்தில் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், விஜய்யும் தன்னை நல்ல முறையில் நடத்தியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.. சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் விஜய் அழைத்து சென்றதாகவும் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.. 2021-ம் ஆண்டு முதல் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், விஜய்யின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதாவது விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு தெரியவந்ததாக சங்கீதா மனுவில் தெரிவித்துள்ளார்.. திருமண உறவில் விஜய் செய்த நம்பிக்கை துரோகத்தால் தீவிர மன வேதனை அடைந்ததாகவும், சங்கீதா தெரிவித்துள்ளார்..
நடிகை உடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறினாலும், விஜய்யின் நடவடிக்கையில் மாற்றமில்லை என்றும் சங்கீதா தெரிவித்துள்ளார்.. தனது தவறு குறித்து மனம் வருந்தாமல் நடிகை உடனான உறவை விஜய் தொடர்ந்தார் எனவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்..
மேலும் கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் நடிகை பெயரை வெளியிடுவேன் என்று சங்கீதா தனது மனுவில் எச்சரித்துள்ளார்.. தனது மனுவில் “ விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகையே சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டது.. தந்தையின் நடத்தையால் குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது.. அந்த நடிகை உடன் விஜய் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார்.. நடிகை உடனான உறவை தட்டி கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்..
விஜய் என்னை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை.. என்னை பொருளாதார ரீதியில் முடக்கப் பார்த்தார்.. என்னை கட்டுப்படுத்தவும் முயற்சித்தார்.. நிதிக் கட்டுப்பாடுகளையும் விதித்தார்.. இதனால் நானும் எனது பிள்ளைகளும் கடும் மன உளைச்சலுக்கும் ஆளானோம்..
நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வெளியிடுவேன்.. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2-வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்.. நடிகையுடன் உறவில் இருந்து கொண்டு விஜய் தன்னை 2 ஆண்டுகளுக்கு மேலாக கொடுமைப்படுத்தி வந்தார்.. எல்லாவற்றையும் மீறி சமூகமாக வாழலாம் என்று இரண்டு முறை மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.. மாற்று வழி தெரியாத காரணத்தினால் தான் தற்போது நீதிமன்றத்தை நாடி உள்ளோம்..
எனவே நீலாங்கரை வீட்டில் தான் வசிக்க அனுமதி வழங்கவும், ஜீவானம்சமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தொகையை வழங்க வேண்டும் என்றும் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.. முதலில் இந்த வழக்கு குறித்து விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.. விஜய் விவாகரத்து வழங்குகிறாரா? அல்லது வழக்கை தொடர்ந்து நடத்துவாரா என்பது இனி தான் தெரியவரும்.
விஜய்யும் சங்கீதாவும் ஆகஸ்ட் 25, 1999 அன்று திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு ஜேசன் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : கேஸ் சிலிண்டர்களுக்கு புதிய விதிகள்.. மோடி அரசின் பரபரப்பு முடிவு..!



