பதற்றம்.. பரபரப்பு..!! அதிமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்..!! திண்டுக்கல்லில் பயங்கரம்..!!

Crime 2025

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக நிர்வாகி ஒருவரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமதுரை அடுத்த பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மருதமுத்து (எ) முத்தன் (42), செங்கல் சூளை அதிபரான இவர், அதிமுகவில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.


நேற்று முன்தினம் இரவு மருதமுத்து தனது நண்பர் கிருபாகரனுடன் பெரியகோட்டை – வன்னியபட்டி சாலையில் உள்ள சந்தனவர்தினி ஆற்றுப்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கிருபாகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட, மருதமுத்து மட்டும் அக்கும்பலிடம் சிக்கிக்கொண்டார்.

உயிருக்கு பயந்து அங்கிருந்த தென்னந்தோப்பிற்குள் அவர் ஓடிய போதிலும், விடாமல் துரத்திய அந்த கும்பல் அவரைச் சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த மருதமுத்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர், மருதமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தொழில் ரீதியான பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக நிலவி வந்த முன்விரோதமே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர் ஒருவர் தோப்பிற்குள் துரத்திக் கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Read More : FLASH | இன்னும் சற்று நேரத்தில்..!! கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்..!! தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

CHELLA

Next Post

எவன் கூட ஊர் சுத்தப் போற..? மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவன்..!! ஃபிரிட்ஜுக்கு பின்னால் தெரிந்த உருவம்..!!

Sat Feb 28 , 2026
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு – துர்கா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மைக்காலமாகத் தம்பதிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு இந்த விபரீத முடிவுக்கு வழிவகுத்துள்ளது. துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த துர்கா, பணிக்குச் செல்லும்போது நாகரீகமாக […]
Crime 2026 18

You May Like